மும்பை: முன்னாள் ஒன்றிய அமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான ராவ்சாகேப் தன்வேயின் மகள் சஞ்சனா ஜாதவ் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் நேற்று சிவசேனாவில் சேர்ந்தார். சஞ்சனா ஜாதவ் கன்கட் தொகுதியில் சிவசேனா சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், பாஜ முன்னாள் எம்பி ராஜேந்திர காவிட், கட்சியை சேர்ந்த பிரமுகர் விலாஸ் தரே ஆகியோரும் நேற்று சிவசேனாவில் சேர்ந்தனர்.
ராஜேந்திர காவிட் முன்பு சிவசேனாவில் இருந்தவர். கட்சி உடைந்த போது அவர் ஷிண்டே அணியை ஆதரித்தார். பின்னர் பாஜவில் சேர்ந்தார்.முன்னாள் எம்பி ராஜேந்திர காவிட் சிவசேனா சார்பில் பால்கர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சிவசேனா அறிவித்தது. அதில் காவிட்டின் பெயர் இடம் பெற்றிருந்தது.
The post பாஜவில் இருந்து சிவசேனாவுக்கு தாவிய மாஜி ஒன்றிய அமைச்சர் மகள் appeared first on Dinakaran.