திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பாஜ சார்பில் மதுரை பெருங்கோட்ட தொண்டர் தரிசன நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ‘‘இரட்டை இலை மற்றும் தாமரை உறுதியான, இறுதியான கூட்டணி. யார் யாருக்கு எவ்வளவு பங்கெடுப்பு என்பது எனக்கும் தேவையில்லை. நமக்கும் தேவையில்லை. இது குறித்து இணையதளத்தில் பகிர்வதால் எந்த பிரச்னையும் வந்து விடக்கூடாது.
இணையதளத்தில் தொண்டர்கள் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும்’’ என்றார். நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பேசிக் கொண்டிருந்த போது அவரது பேச்சை கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கேட்காமல் உணவுக்காக சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கட்சி தொண்டர் ஒருவர், சாப்பாடு கூட ஒழுங்காக போடவில்லை எனக் கூறி நொந்தபடியே வெளியேறினார்.
இந்நிகழ்ச்சியை முடித்துக் கொண்வு, சுவாமி தரிசனம் செய்வதற்காக, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலையில் பழநி வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பாரதிய ஜனதா கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என சீமான் கூறியது அவருடைய விருப்பம். தேர்தலுக்கு ஓராண்டு உள்ளதால் தற்போது பூத் வாரியாக வலுப்படுத்துவது தான் எனது நோக்கம்’’ என்றார்.
The post பாஜவினர் நாகரீகமா நடந்துக்கோங்க…நயினார் அட்வைஸ் appeared first on Dinakaran.