சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில் பாஜகவுடன் அதிமுக நெருக்கம் காட்டுகிறது. பாஜக உடன் கூட்டணியா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி மழுப்பலான பதிலையே அளித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு 6 மாதம் கழித்து கேளுங்கள் என எடப்பாடி பதிலளித்தார். பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு இல்லை என இபிஎஸ் நேரடியாக பதில் அளிக்கவில்லை. கூட்டணி குறித்து அவசரகதியில் இப்போது எதையும் சொல்ல முடியாது என பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் தெரிவித்துள்ளார். அமித்ஷா 2 நாட்களில் தமிழகம் வரவுள்ளார்.
அமித்ஷா தமிழகம் வரும்போது இன்னும் பல மாற்றங்கள் நிகழும் என்றும் கூறினார். இதனிடையே கோவைக்கு அமித்ஷா வந்தபோது அதிமுக எஸ்.பி. வேலுமணி தனியே சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈஷாவுக்கு வந்த அமித்ஷாவை தனியே சந்தித்து எஸ்.பி. வேலுமணி அரசியல் பற்றி பேசியதாக கூறப்படுகிறது. அமித்ஷா- எஸ்.பி. வேலுமணி சந்திப்பு சுமார் 8 நிமிடங்கள் வரை நீடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து எஸ்.பி. வேலுமணி மகன் திருமணத்திற்கு வந்த அண்ணாமலையுடன் அதிமுகவினர் நெருக்கம் காட்டினர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எழுந்து நின்று அண்ணாமலைக்கு வணக்கம் தெரிவித்து வரவேற்றனர்.
The post பாஜகவுடன் நெருக்கம் காட்டுகிறதா அதிமுக?.. பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.