பாஜகவில் எனக்கு நண்பர்கள் பலர் உள்ளனர்... ஆனால்.... திருமாவளவன் உறுதி

5 hours ago 2

சென்னை,

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கே.பி.ராமலிங்கம் எனக்கு நன்கு அறிமுகமானவர். திமுக மாநிலங்களவை உறுப்பினராக அவர் இருந்தபோது நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளேன். அந்த நட்பின் அடிப்படையில் அவர் சந்திக்க வந்தால் நிச்சயமாக வரவேற்போம்.

பாஜகவில் எனக்கு நண்பர்கள் பலர் உள்ளனர்; நட்பு வேறு; உள்வாங்கிய கொள்கை வேறு பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன். பாஜகவிற்கு அவர்களது கொள்கை எவ்வளவு முக்கியமோ அதுபோல் எங்கள் கொள்கை எங்களுக்கு முக்கியம். பாஜகவின் கொள்கைகள் அம்பேத்கரின் கொள்கைகளுக்கு நேர் முரணானது. இந்துத்துவம் வேறு; அம்பேத்கரியம் வேறு; எங்களுக்கு எங்கள் கொள்கை உயிர்மூச்சு.

திமுக கூட்டணியில் இருப்பதால் பாஜகவை எதிர்ப்பதில்லை. கூட்டணியில் இருந்தாலும், இல்லை என்றாலும் பாஜகவை எதிர்ப்போம்; அதற்கு தனிப்பட்ட தேர்தல் அரசியல் காரணம் கிடையாது. மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகிய கொள்கைகளுக்கு நேர் எதிரான கட்சி பாஜக. பாஜகவில் எனக்கு நண்பர்கள் பலர் உள்ளனர்; நட்பு வேறு; உள்வாங்கிய கொள்கை வேறு.

அதிமுகவை விமர்சிக்க வேண்டும் எனும் நோக்கத்தில் நான் விமர்சிக்கவில்லை. அதிமுக மீது எனக்கு எந்த காழ்ப்பும் இல்லை. அதிமுக வலுவாக இருக்கும்போதே, கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்கிறார் என்றால், அதிமுகவை அவர்கள் எந்த அளவிற்கு பலவீனமாக கருதுகிறார்கள் என்பதை சொல்லும் என்னை விமர்சிக்கிறார்கள். அதுதான் அதிமுகவின் அணுகுமுறையாகவும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article