பாஜக மாநில தலைவர் பதவிக்கு இன்று விருப்பமனு: அண்ணாமலை போட்டி இல்லை

1 week ago 4

சென்னை: பாஜக மாநில தலை​வர் தேர்​தலுக்கு விருப்​பமனு தாக்​கல் இன்று நடை​பெறுகிறது. தமிழக பாஜக​வில் மாநில தலைவர் மற்​றும் தேசிய செயற்​குழு உறுப்​பினர் பதவி​களுக்​கான தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி, இவ்​விரு பதவிகளுக்கு போட்​டி​யிடு​பவர்​கள் விருப்​பமனு தாக்​கல் செய்​ய​லாம் என தமிழக பாஜக தேர்​தல் அதி​காரி எம்​.சக்​கர​வர்த்தி அறி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மாநில தலை​வர் மற்​றும் தேசிய செயற்​குழு உறுப்​பினர் தேர்​தலுக்​கான விருப்​பமனுக்​களை கட்​சி​யின் இணை​யதள​மான www.bjptn.com என்ற இணை​யதளத்​தில் இருந்து பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். ஏப்​.11-ம் தேதி வெள்​ளிக்​கிழமை மதி​யம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்​டி​யிட விருப்​ப​முள்​ளவர்​கள் விருப்​பமனுவை மாநிலத் தலைமை அலு​வல​கத்​தில் சமர்ப்​பிக்க வேண்​டும்.

Read Entire Article