பாஜக அரசை கண்டித்து தலைஞாயிறு ஒன்றிய திமுக ஆர்ப்பாட்டம்

3 days ago 5

வேதாரண்யம், மார்ச் 30: 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தலைஞாயிறு ஒன்றிய கழகத்தின் சார்பில் நீர்முளை கடை தெருவில் தலைஞாயிறு திமுக ஒன்றிய செயலாளர் மகா குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட திமுக துணை செயலாளர் கற்பகம் நீலமேகம், பேரூர் கழக செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய கழக துணை செயலாளர்கள் ரவி, அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் ஆரோக்கியம், ரவிச்சந்திரன், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் சுந்தர பிரபாகரன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் வெங்கடாசலம், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணி துணை அமைப்பாளர் அன்புச் செழியன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பிரகாஷ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் புவனேஸ்வரி செந்தில், உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர், வார்டு கழக செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post பாஜக அரசை கண்டித்து தலைஞாயிறு ஒன்றிய திமுக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article