பாஜ கூட்டணி ஆளும் மாநிலங்களில் இலவச மின்சாரம் தர முடியுமா? பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் சவால்

3 months ago 20

புதுடெல்லி: தேஜ கூட்டணி ஆளும் மாநிலங்களில் இலவச மின்சாரம் வழங்க முடியுமா என்று பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:  பாஜவின் இரட்டை இன்ஜின் மாடல் பல மாநிலங்களில் தோல்வி அடைந்து வருகிறது. அரியானா, காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜ தோல்வி அடைவது உறுதி என்பதை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இரட்டை இன்ஜின் என்பது, இரட்டை ஊழல், இரட்டை கொள்ளை. பாஜ என்பது ஏழைகளுக்கு எதிரான கட்சி. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக பாஜ கூட்டணி ஆட்சி நடக்கும் 22 மாநிலங்களுக்கு இலவச மின்சார திட்டத்தை அறிவிக்க பிரதமர் மோடி தயாரா? அப்படி அறிவித்தால், பிரதமர் மோடிக்காக, பாஜவுக்கு பிரசாரம் செய்ய தயாராக உள்ளேன். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

The post பாஜ கூட்டணி ஆளும் மாநிலங்களில் இலவச மின்சாரம் தர முடியுமா? பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் சவால் appeared first on Dinakaran.

Read Entire Article