பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு

6 months ago 69

புதுடெல்லி,

நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய் துறையானது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன்படி, பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதேபோன்று, புழுங்கல் அரிசிக்கு விதிக்கப்பட்ட வரியானது 10 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டு உள்ளது. இந்த வரி மாற்ற அறிவிப்பானது நேற்றைய தினத்தில் இருந்து அமலுக்கு வரும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதேபோன்று, தீட்டாத அரிசி மற்றும் நெல் ஆகியவற்றுக்கான ஏற்றுமதி வரியும் 10 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டு உள்ளது. இந்த வகை அரிசி மற்றும் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு இதுவரை 20 சதவீதம் என்ற அளவில் ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு வந்தது.

இந்த மாத தொடக்கத்தில் பாசுமதி அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை அரசு நீக்கியிருந்தது. இதனால், ஏற்றுமதி அதிகரிப்பதுடன், விவசாயிகளின் வருவாயும் மேம்படும்.

Read Entire Article