![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/24/35579974-untitled-1.webp)
முல்தான்,
முல்தான், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் கடந்த 17ம் தேதி தொடங்கியது . இதில் பாகிஸ்தான் 127 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது . இந்திய நேரப்படி காலை 10.00 மணிக்கு போட்டி தொடங்குகிறது.