பாகிஸ்தான் திரைப்படங்கள், பாடல்களை ஒளிபரப்பக் கூடாது: ஓ.டி.டி. தளங்களுக்கு அறிவுறுத்தல்

9 hours ago 3

புதுடெல்லி,

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா ராணுவம் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. 'ஆபரேஷன் சிந்தூர்' அதிரடி வேட்டையில் பயங்கரவாதிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தரப்பில் பதிலடி தாக்குதல் என்ற பெயரில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. அதனை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்தநிலையில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட சினிமா படங்கள், பாடல்கள், இணைய தொடர்கள் ஆகியவற்றை ஓ.டி.டி. நிறுவனங்கள் ஒளிபரப்ப மத்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தேசிய பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு, ஓ.டி.டி. நிறுவனங்கள் மூலமாக ஒளிபரப்பப்படும் பாகிஸ்தான் சினிமா, பாடல்கள், இணைய தொடர்கள் ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடை பாதிக்கும் எந்தவொரு உள்ளடக்கமும் ஆபத்தை விளைவிக்கும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article