பாகிஸ்தான் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரா...? - கிரிக்கெட் வாரியம் விளக்கம்

2 hours ago 1

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாகிஸ்தான் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கேரி கிர்ஸ்டன் பதவி விலகினார்.

இதையடுத்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் கில்லெஸ்பி (ஆஸ்திரேலியா) ஒரு நாள் மற்றும் 20 ஒவர் போட்டி அணிக்கு இடைக்கால பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் கில்லெஸ்பியை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மூன்று வடிவிலான போட்டிக்கும் ஒரே பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆகிப் ஜாவித்தை (வயது 52) நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், இந்த தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ளார் என்ற தகவலை கிரிக்கெட் வாரியம் மறுக்கிறது. மேலும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கில்லெஸ்பியே தலைமை பயிற்சியாளராக தொடர்வார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


PCB strongly refutes the story. As announced previously, Jason Gillespie will continue to coach the Pakistan side for the two red-ball matches against South Africa. https://t.co/J5MYKuq368

— Pakistan Cricket (@TheRealPCB) November 17, 2024

Read Entire Article