பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ உள்ளே சென்று ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகத்தை தகர்த்த இந்தியா

17 hours ago 3

புதுடெல்லி,

காஷ்மீர் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதி 26 பேர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியா கடந்த 7-ந்தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இறந்ததாக இந்தியா தெரிவித்தது.

ஆனால் பாகிஸ்தான் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. பொதுமக்கள்தான் இறந்தனர் என்று பொய் சொல்லி வந்தது. ஆனால் இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசாரின் குடும்பத்தினர் 14 பேர் கொல்லப்பட்டதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகம், இந்தியாவின் துல்லியமான தாக்குதல்களில் தகர்க்கப்பட்டதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவு அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த அமைப்பின் கட்டளை மையமாக செயல்பட்டு தலைமையகம் இந்தியா ராணுவத்தின் தாக்குதலில் சுக்குநூறாகத் தகர்க்கப்பட்டுள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்குள் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவுக்குச் சென்று இந்திய ராணுவம் தாக்கி இருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் மொத்தம் 9 பயங்கரவாத முகாம்களை தரைமட்டமாக்கியது. இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் உயிரிழந்துள்ளனர். அவரது சகோதரரும், குழுவின் செயல்பாட்டுத் தளபதியுமான அப்துல் ரவூப் அசாரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article