பாகிஸ்தான்: பாகிஸ்தானுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமுக்கு சுற்றுலா சென்றிருந்தவர்களில், 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து செயல்படும், லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளையான, ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்’ என்ற அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக ஒப்புக்கொண்டது. முதல் முறையாக அப்பாவி பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதல், உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அட்டாரி – வாகா எல்லை மூடல்; பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு; விசா மறுப்பு; பாகிஸ்தானில் உள்ள இந்திய துாதரகம் மூடல் போன்றவை இதில் அடங்கும்.இதில், யூஏஇ, இலங்கை, சிங்கப்பூர் வழியாக பெரும்பாலும் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும். ஆண்டுக்கு ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கும் மேலான யூஏஇ, இலங்கை, சிங்கப்பூர் வழியாக பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
The post பாகிஸ்தானுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்க ஒன்றிய அரசு திட்டம்..!! appeared first on Dinakaran.