முல்தான்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டில் முல்தானில் நாளை தொடங்குகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்களை இங்கிலாந்து அறிவித்துள்ளது. இதில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பெயர் இடம் பெறவில்லை. கடந்த ஆகஸ்டு மாதம் இடது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பில் இருந்து மீண்டு வரும் பென் ஸ்டோக்ஸ் கடந்த மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை.
அவர் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்டில் இருந்தும் விலகி உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக ஆலி போப் கேப்டன் பொறுப்பை கவனிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்தின் விளையாடும் வீரர்கள் விவரம்;
ஜாக் க்ராவ்லி, பென் டக்கட், ஆலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஜேக் லீச், ஷோயப் பஷீர்.