
வெலிங்டன்,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் இவ்விரு அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது. டி20 தொடர் முடிவடைந்தவுடன் ஒருநாள் தொடர் தொடங்குகிறது.
அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகிற 29-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போடிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டாம் லதாம் தலைமையிலான அந்த அணியில் டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல் ஆகிய முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
நியூசிலாந்து அணி விவரம் பின்வருமாறு:- டாம் லதாம் (கேப்டன்), முகமது அப்பாஸ், ஆதி அசோக், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டபி, மிட்ச் ஹே, நிக் கெல்லி, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், பென் சியர்ஸ், நாதன் சுமித், வில் யங்