பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

5 months ago 15

டர்பன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக ஒருநாள் தொடரும், இறுதியில் டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளது.

அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பவுமா தலைமையிலான அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளார் ரபடா நீண்ட நாட்கள் கழித்து இடம்பிடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:-

பவுமா (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், டோனி டி சோர்ஜி, மார்கோ ஜான்சன், கிளாசென், கேசவ் மகராஜ், மபாகா, மார்க்ரம், டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ககிசோ ரபடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, ரஸ்ஸி வான் டெர் துசென்

Kagiso Rabada and David Miller back in the Proteas ODI setup for the series against Pakistan More on South Africa's squad ➡️ https://t.co/68rkAvoinz#SAvPAK pic.twitter.com/bwRJnFpHtN

— ICC (@ICC) December 12, 2024
Read Entire Article