பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்; சிறந்த பீல்டர் விருதை வென்ற ரிச்சா கோஷ்

3 months ago 24

துபாய்,

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 105 ரன் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 106 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்தியா 18.5 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 108 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) ஒவ்வொரு தொடரின் (இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்) முடிவிலும், அந்த தொடரில் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரர்/ வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதேபோல், ஐ.சி.சி. நடத்தும் தொடர்களில் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரர்/ வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்நிலையில், மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சிறப்பாக பீல்டிங் செய்த வீராங்கனை விருது இளம் வீராங்கனையான ரிச்சா கோஷ்-க்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


| | #INDvPAK

A ceremony that started in the dressing room & ended in the team bus!

WATCH - By @ameyatilak | #TeamIndia | #T20WorldCup | #WomenInBluehttps://t.co/kbBUGPoqZN

— BCCI Women (@BCCIWomen) October 7, 2024

Read Entire Article