பாகிஸ்தானுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்

6 months ago 14

துபாய்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (66.67 சதவீதம்), ஆஸ்திரேலியா (58.89 சதவீதம்), இந்தியா (55.88 சதவீதம்), நியூசிலாந்து (48.21 சதவீதம்), இலங்கை (45.45 சதவீதம்), இங்கிலாந்து (43.18 சதவீதம்) அணிகள் முதல் 6 இடங்களில் உள்ளன.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வி கண்டதை அடுத்து 7வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் (30.30 சதவீதம்) 8வது இடத்திற்கு சரிந்துள்ளது. 8வது இடத்தில் இருந்த வங்காளதேசம் (31.25 சதவீதம்) 7வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 9வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் (24.24 சதவீதம்) உள்ளது.

Read Entire Article