தேவையான பொருள்கள்:
வேர்க்கடலைப் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
எள் 2 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கொத்தமல்லி விதை 1 டீஸ்பூன்
வெந்தயம் ¼ டீஸ்பூன்
காய்ந்த சிவப்பு மிளகாய் 4.
பெரிய சைஸ் பாகற்காய் 1
எண்ணெய் தேவையான அளவு
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் ½ டீஸ்பூன்
பெருங்காயம் 1 சிட்டிகை
காய்ந்த சிவப்பு மிளகாய் 1
நறுக்கிய வெங்காயம் 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் ½ டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
புளி கரைத்த நீர் 1 கப்
வெல்லம் 1டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலைகள் 1 கைப்பிடி
செய்முறை:
மேலே கூறிய பொருட்களில் ஒன்று முதல் எட்டு வரை உள்ளவற்றை ஒரு கடாயில் போட்டு சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடி பண்ணிக்கொள்ளவும்.பாகற்காயை வட்ட வடிவ ஸ்லைஸ்ஸாக நறுக்கி விதைகளை நீக்கி ஒரு டீஸ்பூன் உப்பு கலந்த நீரில் போட்டு ஐந்து நிமிடங்கள் ஊற விடவும். பின் காயை நன்கு பிழிந்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.பிறகு ஒரு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், ஒரு சிவப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும். அவை பொன்னிறமானதும் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.பின் அதனுடன் பொரித்த பாகற்காய் துண்டுகள், உப்புத்தூள் மஞ்சள் தூள் சேர்த்து கிளறிவிடவும். பின் புளிக்கரைசல், வெல்லம் மற்றும் அரைத்து வைத்த பொடி ஆகியவற்றை சேர்த்து அனைத்தையும் ஒன்றுசேர கலந்துவிடவும். பிறகு கொதி வந்ததும், மிதமான தீயில் இரண்டு நிமிடம் வைத்து இறக்கவும். கொத்தமல்லி இலைகள் சேர்த்து அலங்கரிக்கவும்.
The post பாகற்காய் குழம்பு appeared first on Dinakaran.