பாகனை இழந்து 3 நாளாக சோகம்.. முதல்முறையாக பதில் சொன்ன தெய்வானை ஆச்சரியப்படுத்தும் வீடியோ வெளியீடு..!!

18 hours ago 2

திருச்செந்தூர் : பாகனின் இறப்புக்கு பிறகு 3 நாட்களாக சோகத்தில் இருந்த தெய்வானை யானை குளிர்க்கவைக்கப்பட்டபின்பு சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் தெய்வானை யானை மிதித்ததில் அதின் பாகனும், பாகனின் உறவினரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.கடந்த 18 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் பாகன் உயிரிழந்தது தெரியாமல் தெய்வானை யானை அவரை எழுப்ப முயன்ற காட்சிகளும் வெளியாகி இருந்தது. ஒரு சில நொடிகளில் இருவரும் உயிரிழந்த நிலையில் கால்நடை மற்றும் வனத்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைத்து யானை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 3 நாட்களாக வழக்கமான காலை நேர நடைப்பயிற்சி, குளியல் போன்ற ஏதும் இல்லாமல் தனி அறையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது தெய்வானை.

இதை அடுத்து பாகனின் இறப்புக்கு பிறகு நேற்றைய தின குளியலின் போது துதிக்கையில் தண்ணீரை எடுத்து பீய்ச்சி அடித்தது.இதை அடுத்து கொடுக்கப்பட்ட நவதானிய உணவுகள், புற்கள் மற்றும் பழங்களை பொறுமையாக வாங்கி சாப்பிட்டது. உணவு முடித்தபின் அறைக்கு சென்ற வனத்துறை மற்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள் தெய்வானை யானையை ஆய்வு செய்தனர்.அப்போது நல்லா சாப்டியா.. தண்ணீர் குடிச்சியா என்று மருத்துவர் கேட்ட கேள்விகளுக்கு மழலை மொழியில் தலையை அசைத்து பதில் சொன்ன தெய்வானையின் செயல் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. 3 நாட்களாக சோகத்துடன் காணப்பட்ட தெய்வானை மருத்துவர்களின் கண்காணிப்பை அடுத்து இப்பொது இயல்பு நிலைக்கு திரும்பியது.

 

The post பாகனை இழந்து 3 நாளாக சோகம்.. முதல்முறையாக பதில் சொன்ன தெய்வானை ஆச்சரியப்படுத்தும் வீடியோ வெளியீடு..!! appeared first on Dinakaran.

Read Entire Article