பா.ஜ.க. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது: அமைச்சர் கோவி.செழியன்

1 week ago 3

தஞ்சாவூா்,

தஞ்சையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,

கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிரந்தர இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் மூலம் கோப்புகள் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக கவர்னர் இதுவரை ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துகிறார்.கவர்னரை சந்தித்து இது சம்பந்தமாக கோரிக்கை வைக்க நேரம் கேட்டுள்ளோம். இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. தமிழக கவர்னர் விரைவில் அழைக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்.

பா.ஜ.க ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டையும், தமிழக அமைச்சரையும் வஞ்சிக்கிறது.17 மாநிலங்களில் ஆளுகிற பா.ஜ.க மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.க செய்கிற அநீதியை கண்டிக்கிற ஒரே ஒற்றைத் தலைவர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். அது அவர்களுக்கு பிடிக்கவில்லை. தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். அதை எல்லாம் விரைவில் உடைத்து எரிந்து தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article