இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலை நடத்தியது இந்தியா தான் என்று பாகிஸ்தான் மாஜி வீரர் ஷாஹித் அப்ரிடி அபாண்டமாக கூறி உள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு மத்தியில் இந்தியாவையும், இந்துக்களையும் குற்றம்சாட்டி கடுமையாக விமர்சிக்கும் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி, ‘பஹல்காம் தாக்குதலை இந்தியா தான் செய்தது. அரைமணிநேரம் தாக்குதல் நடந்தும் இந்திய ராணுவ வீரர் ஒருவர் கூட அங்கு வரவில்லை. இந்தியா தன்னுடைய சொந்த மக்களை கொன்றுவிட்டு பழியை பாகிஸ்தானின் மேல் சுமத்துகிறது’ என்று அபாண்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இவரது பதிவுக்கு சமூக ஊடகங்களில் பலரும் கடும் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். தீவிரவாதத்தை நேரடியாக ஆதரிப்பது போல அவரது பேச்சுகள் இருப்பதாக பலரும் குற்றம்சாட்டியுள்ளனர். முன்னதாக பஹல்காம் தாக்குதல் குறித்து முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, முன்னாள் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி ஆகியோர், ‘பாகிஸ்தானுடனான அனைத்து கிரிக்கெட் தொடர்புகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினர். பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அளித்த பேட்டியில், ‘பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் இனிமேலும் எப்போதும் கிரிக்கெட் தொடருகள் நடைபெறாது’ என்று உறுதியுடன் கூறினார்.
தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஐசிசி மற்றும் ஏஷியா கப் போன்ற சர்வதேச போட்டிகளில் மட்டுமே நடைபெறுகின்றன. கடைசியாக கடந்த 2008ல் பாகிஸ்தானில் இந்தியா விளையாடியது. அதன்பின் 2013ல் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சர்வதேச போட்டி நடந்தது குறிப்பிடத்தக்கது.
The post பஹல்காம் தாக்குதலை நடத்தியது இந்தியா தான்!: பாக். மாஜி கிரிக்கெட் வீரர் அபாண்டம் appeared first on Dinakaran.