கான்பூர்: ஜம்முவின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பலியானவர்களில் ஒருவரான உத்தரப்பிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த சுபம் திவேதியின் மனைவி அஷான்யா கூறுகையில்,‘‘எனக்கு வேலையோ பணமோ வேண்டாம். ஆனால் என் கணவர் சுபத்திற்கு தியாகி அந்தஸ்து மட்டும் போதும். என் வாழ்நாள் முழுவதும் இந்த வலியை நான் சுமப்பேன்.
சுபம் ஒரு தியாகியாக அங்கீகாரம் பெறவும் இல்லை .கொலைகளுக்கு பொறுப்பான தீவிரவாதிகளை அரசாங்கம் ஒழிக்கவுமில்லை. சுபத்திற்கு தியாகி அந்தஸ்து கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியிடம் தெரிவித்தேன். இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக ராகுல்ஜி உறுதியளித்துள்ளார்” என்றார்.
The post பஹல்காம் கொலைகளுக்கு பொறுப்பான தீவிரவாதிகளை அரசு இதுவரை ஒழிக்கவில்லை: தாக்குதலில் இறந்தவர் மனைவி வேதனை appeared first on Dinakaran.