பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல்: இந்தியாவுக்கு தேவையான உதவி வழங்க தயார் -அமெரிக்கா உறுதி

8 hours ago 3

வாஷிங்டன்,

இந்தியாவின் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நகரில் கடந்த 22-ந் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது.

இதனையடுத்து இந்தியாவுக்கு ஆதரவாக உலக நாடுகள் பலவும் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதன்படி அமெரிக்க தேசிய புலனாய்வுத்துறை இயக்குனரும், இந்திய வம்சாவளியுமான காஷ் படேலும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு அமெரிக்க தேசிய புலனாய்வுத்துறை இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவியையும் வழங்க தயாராக இருப்பதாகவும், மேலும் பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடிக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Read Entire Article