பவுர்ணமி கிரிவலம்: விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்

5 hours ago 2

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பவுர்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி, விழுப்புரத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 9.25 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில், காலை 11.10 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். அதே தேதியில், திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Read Entire Article