பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

3 hours ago 3

கோவை,

கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பி வரும் நிலையில், அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டுள்ளது. பில்லூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானி கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். போலீசார் மைக் மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Read Entire Article