
டுனெடின்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி டுனெடினில் நேற்று நடைபெற்றது. மழை காரணமாக இந்த போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் அடித்தது. இதனையடுத்து 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து 13.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹா கூறியதாவது,
கடந்த ஆட்டத்துடன் ஒப்பிடுகையில் இதில் நாங்கள் நன்றாக செயல்பட்டோம். பவர்-பிளேவுக்கு பிறகு அருமையாக பந்து வீசினோம். ஆனால் 'பவர்-பிளே'யில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். இவ்வாறு அவர் கூறினார்.