பவர் டில்லர், விசை களை எடுக்கும் கருவி உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்று கொள்ளலாம்

4 weeks ago 4

கரூர், டிச. 16: பவர் டில்லர், விசை களை எடுக்கும் கருவி உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற்று கொள்ளலாம். தொடர்பு கொள்ளுங்கள் என்று கரூர் மாவ ட்ட கலெக்டர் தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு வேளாண் உற்பத்தியையும், விவசாயிகளின் நிகர வருமானத்தையும் அதிகரித்திட வேளாண் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான துணை இயக்க திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுவதோடு, குறித்த காலத்தில் பயிர்சாகுபடி செய்திடவும் வழி வகுக்கப்படுகிறது. நடப்பு 2024,25ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு, கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் 31, விசைக்களையெடுக்கும் கருவி (பவர் வீடர்) 32, வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் பெற அதிகபட்சமாக ரூ. 1.20 லட்சம், விசைக்களையெடுப்பான்களுக்கு அதிகபட்சமாக ரூ. 63 ஆயிரம் அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த தொகை சிறு, குறு, ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழ ங்கப்பட்டு வருகிறது. இதர விவசாயிகளுககு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிக பட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த திட்டத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவை சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களின் பங்களிப்புத் தொகையை குறைத்து உதவிடும் வகையில் நடைமுறையில் உள்ள மானியத்துடன் 20 சதவீத கூடுதல் மானியம் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள் வாங்கிட 20 சதவீத கூடுதல் மானியமாக ரூ. 48ஆயிரம் விசைக் களை எடுக்கும் கருவி வாங்கிட அதிகபட்சமாக ரூ. 88ஆயிரத்து 200 வரை மானியம் ஆதி திராவிடர், பழங்குடியினர் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. உதாரணமாக பவர் டில்லரின் மொத்த விலை ரூ. 2லட்சத்து 40 ஆயிரம் எனில், ரூ. 1,68,000 மானியம் போக மீதி விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.72000 செலுத்தினால் போதும், விசைக்களை எடுக்கும் கருவியின் மொத்த விலை ரூ,, 1,30,000 எனில் ரூ. 88ஆயிரத்த 200 மானியம் போக மீதி விவசாயிகளின் பங்களிப்பாக ரூ, 41,800 செலுத்தினால் போதும். இந்த மானியத் தொகையானது இயந்திரங்களின் மொத்த விலைக்கு தகுந்தவாறு மாறுபடும்.

பொது பிரிவை சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள மானியத்துடன் 10 சதவீத கூடுதல் மானியம் அதிகபட்சமாக ரூ, 12,600, விசைக்களை எடுக்கும் கருவி வழங்கப்படுகிறது. எனவே, ஒட்டு மொத்தமாக விசைக்களை எடுக்கும் கருவி வாங்கிட ரூ. 75,600 வரை மானியம் பொதுப் பிரிவினர்களுக்கு வழங்கப்படுகிறது. உதாரணமாக ரூ. 80ஆயிரம் எனில் ரூ. 48 ஆயிரம் மானியம் போக மீதி விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.32000 மட்டும் செலுத்தினால் போதும். இந்த மானியத் தொகை இயந்திரங்களின் விலைக்கு தகுந்தவாறு மாறுபடும். விவசாயிகள் தங்கள் பங்களிப்பு தொகையை இணையவழி (ஆர்டிஜிஎஸ், என்இஎப்டி) அல்லது வங்கி வரைவோலை மூலமாகவோ சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கோ அல்லது விநியோகஸ்தருக்கோ அல்லது முகவருக்கோ செலுத்தி, பவர் டில்லர், விசைக்களை எடுக்கும் கருவி போன்ற வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம்.மேலும், இந்த திட்டம் தொடர்பாக முழு விபரங்களை பெற்று பயனடைய வேளாண்மை பொறியியல் துறையின் செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது வருவாய் கோட்ட அளவில் உதவி செயற்பொறியாளர் அலுவலகம், கரூர் மற்றும் குளித்தலை அல்லது வட்டார அளவில் உதவி செயற்பொறியாளர், இளநிலை பொறி யாளர் ஆகியோர்களை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும். இவ் வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒட்டு மொத்தமாக விசைக்களை எடுக்கும் கருவி வாங்கிட ரூ. 75,600 வரை மானியம் பொதுப் பிரிவினர்களுக்கு வழங்கப்படுகிறது. உதாரணமாக ரூ. 80ஆயிரம் எனில் ரூ.48 ஆயிரம் மானியம் போக மீதி விவ சாயிகளின் பங்களிப்பாக ரூ.32000 மட்டும் செலு த்தினால் போதும். இந்த மானியத் தொகை இயந்திரங்களின் விலைக்கு தகுந்தவாறு மாறுபடும்.

The post பவர் டில்லர், விசை களை எடுக்கும் கருவி உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்று கொள்ளலாம் appeared first on Dinakaran.

Read Entire Article