பவன் கல்யாணின் 'ஓஜி' படத்தில் பாடியது பற்றி மனம் திறந்த சிம்பு

7 hours ago 2

சென்னை,

பவன் கல்யாணின் 'ஓஜி' படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், பவனுக்கும் படத்தின் வில்லனாக நடிக்கும் எம்ரான் ஹாஷ்மிக்கும் இடையிலான காட்சிகள் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இத்துடன் படப்பிடிப்பு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலைப் பாடி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், 'தக் லைப்' படத்தின் தெலுங்கு புரமோசனின்போது, 'ஓஜி' படத்தில் பாடியது குறித்து சிம்பு மனம் திறந்து பேசினார்.

அவர் கூறுகையில், 'பவன் கல்யாண் படத்தில் பாடுவது எனது கனவு. அந்த பாடலை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். தமன் அற்புதமாக இசையமைத்திருக்கிறார்' என்றார்.

இப்படத்தை செப்டம்பர் 26-ம் தேதி திரையரங்குகளுக்குக் கொண்டுவர தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

Read Entire Article