பழையகாயல் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

3 months ago 18

ஆறுமுகநேரி, அக். 1: பழையகாயல் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். பழையகாயல் அருகே உள்ள புல்லாவெளி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக ஆத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இப்பகுதியில் எஸ்ஐ பாஸ்கரன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவர் போலீசாரை பார்த்ததும் ஓடினர். அவர்களை விரட்டிச் சென்று போலீசார் மடக்கினர். விசாரணையில் அவர்கள், ஆத்தூர் ஆவரையூரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் ஆத்திராஜா(27), பழையகாயல் அடுத்த புல்லாவெளி கீழத்தெருவை சேர்ந்த பால்சாமி மகன் விஜய்(26) என்பதும், இதில் ஆத்திராஜா, தற்போது தூத்துக்குடி ஸ்பிக்நகர் பகுதியில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் விற்பனைக்காக வைத்திருந்த 550 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மாரியப்பன், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

The post பழையகாயல் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article