பழனி அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிகளை மருத்துவமனையில் அனுமதி..

6 months ago 23
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அரசு பேருந்தில் கூட்டமாக இருந்ததால், படியில் நின்றபடி பயணித்த 2 பள்ளி மாணவிகள் தவறி விழுந்து காயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர். கள்ளிமந்தயத்திலிருந்து சென்ற அரசு பேருந்து புளியம்பட்டி அருகே வளைவில் திரும்பிய போது பேருந்தின் 3வது படிக்கட்டில் நின்றபடி பயணித்த மாணவிகள் தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. மாணவிகள் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காலை நேரத்தில் பள்ளி மாணவ மாணவியர்கள் அதிக அளவில் பேருந்தில் பயணம் செய்வதால் கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Read Entire Article