பழநி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வி.சி.க தலைவர் திருமாவளவன் .!

2 months ago 11
பழநி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம் செய்தார். பழநி கோயில் நிர்வாகம் சார்பில், திருமாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பழநியாண்டவர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்த திருமா, மலையில் இருந்து படிவழிப் பாதை வழியாக கீழே இறங்கினார். மலையடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்திற்கு சென்று திருமா, பழநி போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகளை சந்தித்ததோடு, தொட்டிச்சி அம்மன் மற்றும் புலிப்பாணி ஜீவசமாதியில் வழிபாடு நடத்தினார்.
Read Entire Article