பழங்குடியினர் பள்ளியில் பொங்கல் விழா

4 months ago 18

 

பந்தலூர்,ஜன.12: பந்தலூர் அருகே தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.  நீலகிரி மாவட்டம்,பந்தலூர் அருகே தேவாலா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் தலைமை வகித்தார்.

கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் மகேஷ்வரன் மற்றும் சமூக ஆர்வலர் காளிமுத்து,தேவாலா வாழ்க வளமுடன் யோகா மையத்தின் தலைவர் ஹரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொங்கல் விழாவின் சிறப்புகள் குறித்து பேசினர். பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து அனைவருக்கும் பொங்கல் வழங்கி பொங்கலோ பொங்கல் என மாணவர்கள் பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.

தொடர்ந்து மாணவர்களின் சிலம்பம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக தமிழாசிரியர் முருகன் வரவேற்றார். ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியை சுஜாத்தா,ஆசிரியர்கள் தவமுரளி, இளவரசி, ரூபினி, அஞ்சலி, காருண்யா, அர்ஷா, கவிபிரசாந்தினி, சசிகலா, சீதாலட்சுமி மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர்,பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post பழங்குடியினர் பள்ளியில் பொங்கல் விழா appeared first on Dinakaran.

Read Entire Article