பள்ளிக்குள் நுழைந்து மிரட்டல் வழக்கில் மேலும் ஒரு பாஜ நிர்வாகி கைது

3 weeks ago 6

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஒருவர் பைபிள் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கியுள்ளார். இதுபற்றி அவதூறாக பதிவிட்ட ஈரோடு வடக்கு மாவட்ட பாஜ இளைஞரணி மாவட்ட செயலாளர் ஹரிஹரன், பள்ளிக்குள் மேலும் 7 நிர்வாகிகளுடன் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுத்துள்ளாராம். இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின்படி ஹரிஹரன் கைது செய்யப்பட்டார். மற்ற 7 பேரும் தலைமறைவான நிலையில் பவானிசாகர் மண்டல தலைவர் ஈஸ்வரமூர்த்தியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

The post பள்ளிக்குள் நுழைந்து மிரட்டல் வழக்கில் மேலும் ஒரு பாஜ நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Read Entire Article