பள்ளிக்கு தாமதமாக வந்ததால் மாணவிகளின் தலைமுடியை வெட்டிய ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம்

7 months ago 27

அமரவாதி,

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவியர் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு மாணவிகள் சுமார் 18 பேர் காலதாமதமாக வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால், கோபம் அடைந்த ஆசிரியர் சாய் பிரசன்னா, தாமதமாக வந்த 18 மாணவிகளின் தலைமுடியை வெட்டியுள்ளார். மேலும் அவர், நான்கு மாணவர்களை தாக்கி, அவர்களை வெயிலில் நிற்க வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து யாரிடம் கூற வேண்டாம் என்று சாய் பிரசன்னா, மாணவிகளை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

தலைமுடியை வெட்டியதால் மனமுடைந்த மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து மாணவிகள் முடியை வெட்டிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

Read Entire Article