பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 70 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றியது வனத்துறை

2 months ago 10

சென்னை: பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 70 வீடுகளை வனத்துறை சார்பில் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

சென்னை மாநகரில் எஞ்சி இருக்கும் சதுப்பு நிலமாக பள்ளிக்கரணை உள்ளது. இதன் பரப்பளவு 698 ஹெக்டேராக சுருங்கிவிட்டது. இது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் 190 வகையான பறவை இனங்கள், 10 வகையான பாலூட்டி இனங்கள், 21 வகையான ஊர்வன இனங்கள், 10 வகையான நீர், நில வாழ்வன, 50 வகையான மீன் இனங்கள், 14 வகையான வண்ணத்துப்பூச்சிகள் 29 வகையான புல் இனங்கள் உள்ளிட்ட 164 வகையான தாவரங்கள் என மொத்தம் 459 வகையான விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் கொண்ட சூழல் செரிந்த பகுதியாக பள்ளிக்கரணை உள்ளது.

Read Entire Article