பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

4 hours ago 3

வேளச்சேரி: பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் குவித்துவைக்கப்பட்டுள்ள பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 24ம் தேதி ஏலம் விடப்படுகிறது என தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை தாம்பரம் காவல் ஆணையகத்துக்கு உட்பட்ட பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 146 பைக்குகள், வரும் 24ம் தேதி ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் கலந்துகொள்கின்றவர்கள் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் வரும் 20ம் தேதி காலை 10 மணி முதல் 5 மணிக்குள் தங்களது அடையாள அட்டை, ஜி.எஸ்.டி., பதிவு எண் ஆதாரங்களுடன் முன்பதிவு கட்டணமாக ரூ.500 செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும். முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே 24ம் தேதி ஏலக் குழுவினரின் முன்னிலையில் காலை 10 மணி முதல் நடக்கும் ஏலத்தில் பங்கேற்கலாம். அன்றைய தினமே ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனத்திற்கான முழு தொகையை ஜிஎஸ்டியுடன் சேர்த்து செலுத்திய பிறகு விற்பனை ஆணை வழங்கப்படும். இதன்பிறகு வாகனத்தை எடுத்து செல்லலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பறிமுதல் வாகனங்கள் ஏலம் appeared first on Dinakaran.

Read Entire Article