சென்னை: தமிழகம் முழுவதும் பள்ளிகளின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரிய பொதுநல வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்த 4 வயது சிறுமி, கடந்த ஜனவரி 3-ம் தேதி பள்ளி வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரி பாஜக வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.