பள்ளி மாணவர்களுக்கு கோளரங்கத்தில் கணித திறனறித்தேர்வு

1 month ago 7

 

திருச்சி, டிச.13: பள்ளி மாணவர்களுக்கான கணிதத் திறனறித்தேர்வு ஜன.5ம் தேதி கோளரங்கத்தில் நடைபெற உள்ளது. திருச்சி கொட்டப்பட்டு அருகிலுள்ள அண்ணா அறிவியல் மையம் கோளரங்கத்தில் மாணவ சமுதாயம் பயன்பெற வேண்டி தொடர்ந்து அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான கணிதத் திறனறித்தேர்வு ஜன.5ம் தேதி காலை 11 மணிக்கு கோளரங்கத்தில் நடைபெறுகிறது.

5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளலாம். நுழைவுக் கட்டணமாக ரூ..100 செலுத்தவும், பதிவு செய்ய டிச.25ம் தேதி கடைசியாகும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04312332190, 2331921 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திட்ட இயக்குநர் அகிலன் தெரிவித்துள்ளார்.

The post பள்ளி மாணவர்களுக்கு கோளரங்கத்தில் கணித திறனறித்தேர்வு appeared first on Dinakaran.

Read Entire Article