பள்ளி அருகில் கஞ்சா பொட்டலத்துடன் நின்ற இருவர் கைது

6 months ago 39

ஜெயங்கொண்டம், அக்.1: ஜெயங்கொண்டம் அருகே பள்ளி அருகில் கஞ்சா பொட்டலத்துடன் நின்றிருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இருவரை மீன்சுருட்டி போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் வெண்ணங்குழி கிழக்குத் தெரு சோழராஜன் மகன் ராம் (29) என்பது தெரிய வந்தது. மற்றொருவர் ராமதேவநல்லூர் கிராமத்தைந் சேர்ந்த குமார் மகன் விஜயகுமார் (28) என்பதும் தெரிய வந்தது. இவர்களிடம் மேலும் விசாரணை செய்ததில் இருவர்களிடத்தில் சுமார் 100 கிராம் கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இருவர் மீதும் சப் இன்ஸ்பெக்டர் புண்ணியகோடி வழக்கு பதிவு செய்து மேலும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post பள்ளி அருகில் கஞ்சா பொட்டலத்துடன் நின்ற இருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article