சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்படுகிற அறிவிப்புகளை உடனுக்குடன் செயலாக்கி வருகிறோம். விளையாட்டு துறைசார்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் நாம் வெளியிட்ட அறிவிப்புகளின் அடிப்படையில், விளையாட்டு மைதானங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மதுரை , கரூர் மாவட்ட விளையாட்டு வளாகங்களில் ரூ.18.78 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் புதிய நீச்சல் குளம் அமைத்தல், மதுரை, திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்களில் மொத்தம் ரூ.29.77 கோடி மதிப்பில் செயற்கை இழை ஆடுகளத்துடன் ஹாக்கி மைதானங்களை புதுப்பித்தல், கோவை மற்றும் சேலத்தில் தலா ரூ.7.95 கோடி மதிப்பில் புதிய விளையாட்டு விடுதி கட்டுமானம்,
இப்படி மொத்தம் ரூ.64.43 கோடி மதிப்பில் புதிய விளையாட்டு உட்கட்டமைப்புகளை உருவாக்க தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். உலகெங்கும் நம் வீரர்கள் வெற்றிகளை குவித்திட தமிழ்நாட்டில் விளையாட்டுக்கான கட்டமைப்பை உலக தரத்திற்கு உயர்த்துவோம்!
The post பல்வேறு மாவட்டங்களில் விளையாட்டு மைதானங்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். appeared first on Dinakaran.