சென்னை: ரவுடிகள் ஒழிப்பு பிரிவின் (AGO) தொடர் நடவடிக்கையால் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டனர். 200 கிராம் கஞ்சா, 1 இருசக்கர வாகனம், 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை காவல், ரவுடிகள் ஒழிப்பு பிரிவு (Anti Gangster Team) தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின்பேரில். AGO தனிப்படையினர் மற்றும் K-4 அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, நேற்று (15.05.2025) காலை, அண்ணாநகர், கிரசன்ட் மைதானத்தில் கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 நபர்களை விசாரணை செய்தபோது, 2 நபர்களில் ஒருவர் அண்ணாநகர் காவல் நிலைய கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி என்பதும், இருவரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
அதன்பேரில், K-4 அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா வைத்திருந்த 1.நெப்போலியன், வ/30, த/பெ.ராஜா, ICF காலனி, அம்பத்தூர், சென்னை, 2.சதீஷ்குமார் (எ) கலை, வ/25, த/பெ.கலையரசன், வீராசாமி தெரு, அயனாவரம், சென்னை ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா, குற்ற செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட எதிரி நெப்போலியன் என்பவர் “A” Category சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கனவே அண்ணாநகர், ICF, அம்பத்தூர் காவல் நிலையங்களில் கொலை வழக்குகள், கஞ்சா, அடிதடி, வழிப்பறி உட்பட சுமார் 19 குற்ற வழக்குகள் உள்ளதும், எதிரி சதீஷ்குமார் என்பவர் K-2 அயனாவரம் காவல் நிலைய “B” Category சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது கொலைமுயற்சி, கஞ்சா, வழிப்பறி, அடிதடி உட்பட சுமார் 7 குற்றவழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (15.05.2025) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
The post பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 2 பேர் கைது appeared first on Dinakaran.