பல்லடத்தில் காருக்கு வெல்டிங் செய்த போது தீ விபத்து

2 months ago 11

பல்லடம், நவ.10: பல்லடத்தில் காருக்கு வெல்டிங் செய்த போது தீ விபத்து ஏற்பட்டது. பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் உள்ள வெல்டிங் ஒர்க்‌ஷாப்பில் பூமலூர் ஊராட்சி கிடாத்துறையைச் சேர்ந்த விசைத்தறி கூட உரிமையாளர் கதிர்வேல் தனது ஆம்னி காரில் பெட்ரோலுக்கு மாற்றாக காஸ் எரி பொருளில் இயங்குமாறு உரிய சாதனங்கள் பொருத்தி இயக்கி வந்துள்ளார். இந்நிலையில் வாகனத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அப்பகுதியில் உள்ள தனியார் பழுது பார்ப்போர் ஒர்க்‌ஷாப்பில் காரை சரி செய்ய விட்டுள்ளார்.

இந்நிலையில், காரில் வெல்டிங் செய்த போது திடீரென பெட்ரோல் டேங்கில் தீப்பொறி பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் கார் தீ பற்றி எரிந்தது. இது பற்றி தகவல் அறிந்த பல்லடம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதில், கார் எரிந்து சேதம் அடைந்தது.

The post பல்லடத்தில் காருக்கு வெல்டிங் செய்த போது தீ விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article