![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/29/36411836-4.webp)
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் 69-வது படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ஜன நாயகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இது விஜய் நடிக்கும் கடைசி படமாகும். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகவுள்ளது. இந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின.
இந்த நிலையில், இப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை பெரும் தொகைக்கு விற்பனை ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஜன நாயகன் திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் ரூ.75 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான 'தி கோட்' திரைப்படம் ரூ.53 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/29/36411887-3.webp)