பறிமுதல் செய்த 67 படகுகளை ஏலம்விட இலங்கை அரசு முடிவு: தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் அதிர்ச்சி

7 hours ago 2

நாகப்பட்டினம்: எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி பறிமுதல் செய்து, இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட 67 படகுகளை ஏலம்விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளதால், தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் படகுகளை, எல்லை தாண்டி வந்ததாகக் குற்றம்சாட்டி பறிமுதல் செய்யும் இலங்கை அரசு, அவற்றை நாட்டுடைமையாக்கி ஏலம் விடும் நடைமுறையைத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article