பருவமழை முன்னெச்சரிக்கையாக மின்வாரியம் சார்பில் சென்னையில் 15 மண்டலங்களிக்கு செயற்பொரியாளர்கள் நியமனம்

4 months ago 18

சென்னை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து துறைகளும் கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மழைகாலத்தில் மிக முக்கிய துறையாக பார்க்கப்படும் மின்சாரத்துறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும், 15 செயற்பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 15 செயற்பொறியாளர்களும் மண்டலத்திற்கான கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணிக்கு தேவையான அனைத்து பொருட்களும் தயார் நிலையில் உள்ளதாக மின்சாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மின்விநியோகம் பாதிப்பு தொடர்பாக மின்னகம் மூலமாக புகார் அளிக்கலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக பொதுமக்கள் சமூக வலைதள கணக்குகள் மூலம் புகார் அளித்து வருகின்றனர். அவ்வாறு புகார் அளிப்பவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் புகாரை பதிவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

The post பருவமழை முன்னெச்சரிக்கையாக மின்வாரியம் சார்பில் சென்னையில் 15 மண்டலங்களிக்கு செயற்பொரியாளர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Read Entire Article