பருவமழை பாதிப்பில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் தயார் நிலை உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

3 months ago 15

சென்னை: வடகிழக்கு பருவமழை சென்னை பாதிக்கும் நிலையில் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது இயல்பை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கனமழை முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், துணை முதலமைச்சர் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக இரவு, பகல் பாராமல் அடையாறு முகத்துவாரம், பக்கிங்காம் கால்வாய் முகத்துவாரம் அதே போல் கூவம் முகத்துவாரம் போன்ற பல்வேறு பகுதிகளில் கடலில் நீர் கலக்கும் பகுதிகளில் தடையின்றி மழை நீர் செல்வதற்கான வழிவகைகளை நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். முதலமைச்சர் வழிகாட்டுதலோடு மழை பாதிப்புகளை தடுப்பதற்கும், மழைக்கால நோய்களிலிருந்து மக்களை காப்பதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு செய்து செய்து வருகிறது.

*நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

*மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றுவதற்கு 280 மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.

*35 சமையலறை மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

* கோபாலபுரம், சிந்தாதரிப்பேட்டை போன்ற பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1500 லிருந்து 2000 பேர் வரை சமைக்க கூடிய அதி நவீன சமையல் கூடம் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு கூறினார்.

The post பருவமழை பாதிப்பில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் தயார் நிலை உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article