பருவ மழை விபரம் அறிய புதிய செயலி அறிமுகம்

1 month ago 9

 

சிவகங்கை, அக்.7: வடகிழக்குப் பருவ மழை காலத்தில், நம் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை தகவல்களை செயலி வாயிலாக அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வடகிழக்குப் பருவ மழை தொடர்பான TN-ALERT என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நம் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை தகவல்களை, பொதுமக்கள் தமிழிலேயே அறிந்து கொள்ளலாம்.

மேலும், அடுத்த 4 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு, மழைமானி வாரியாக தினசரி பெறப்பட்ட மழையளவு, நீர்தேக்கங்களில் தற்போதைய நீர் இருப்பு விபரம், தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்திற்கு உட்பட்டதா என்பதை அறியும் வசதியும் இச்செயலியில் உள்ளது.

பேரிடர் குறித்த வானிலை முன்னெச்சரிக்கையை அறிந்து கொண்டு, அதற்கேற்ப பொதுமக்கள் ஆயத்த நடவடிக்கை மேற்கொள்ளலாம். இச்செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பேரிடர் மற்றும் கனமழை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் மக்கள், தங்கள் புகார்களை பதிவு செய்ய கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் இலவச கட்டணமில்லாத் தொலைபேசி எண்களான 1077மற்றும் 04575 246233 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

The post பருவ மழை விபரம் அறிய புதிய செயலி அறிமுகம் appeared first on Dinakaran.

Read Entire Article