பரிசு தொகுப்பில் ரூ.1,000 இல்லாதது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை: அமைச்சர் பெரியகருப்பன்

4 months ago 14

சென்னை,

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்த நிலையில், சட்டசபை வளாகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

"பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்வதற்கான டோக்கன் 99 சதவீதம் வழங்கப்பட்டு விட்டது. பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 இல்லாதது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனாலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள மகளிர் உரிமைத்தொகையானது 1.15 லட்சம் கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 சென்றுகொண்டிருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்."

இவ்வாறு அவர் கூறினார்.

 

Read Entire Article