பராமரிப்பு பணி: திருச்சி வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம்

1 month ago 5

திருச்சி,

மதுரை ரெயில்வே கோட்டத்தின் திருச்சி மற்றும் திண்டுக்கல் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன்படி செங்கோட்டை - மயிலாடுதுறை (வண்டி எண்: 16848) நாளை (வியாழக்கிழமை), 14, 17, 28, 31-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் (ஜனவரி) 4, 7, 9, 11-ந்தேதியும், நாகர்கோவில் - சி சிவாஜி மஹ டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16352-) நாளை (வியாழக்கிழமை) மற்றும் அடுத்த மாதம் 9-ந்தேதியும், குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128), இன்று (புதன்கிழமை), 13, 16, 27, 30-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 3, 6, 8, 10-ந்தேதியும், கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12666), வருகிற 14, 28-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 4, 11-ந்தேதி ஆகிய நாட்களில் மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக செல்லும்.

இதேபோல், நாகர்கோவில் - கச்சகுடா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16354) வருகிற 14, 28-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 4, 11-ந்தேதி ஆகிய நாட்களில் திருச்சி வழியாக செல்லாமல் திண்டுக்கல் மற்றும் கரூர் வழியாக செல்லும்.

மேலும் மயிலாடுதுறை - செங்கோட்டை மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16847) வருகிற 14-ந்தேதி அடுத்த மாதம் 9, 11-ந்தேதியும், கச்சகுடா - நாகர்கோவில் சிறப்பு ரெயில் வருகிற 13-ந்தேதியும் அடுத்த மாதம் 10-ந்தேதியும், சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16127) வருகிற 14-ந்தேதி மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், மதுரை வழியாக செல்லாமல், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். இந்த தகவல் திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Read Entire Article